/* connection Music play list Swiss Tamil Catholic Chaplaincy

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

நமது திருப்பயணத்திற்கான பதிவுகள் அனைத்தும் முடிந்து விட்டன. மேலதிக திருப்பயணிகளை இணைத்துக்கொள்ள முடியாதிருப்பதை அறியத்தருகின்றோம்.

குடும்ப தரவுப் படிவம்


சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக  புதிய இயக்குனர் பணியேற்பு திருப்பலி நிகழ்வு ... வாழ்த்தும் நன்றியும்(ஒலி மீள் பதிவு)

ஓர் அரங்கத்தில், அலைமோதும் கூட்டத்தின் நடுவே நாடகம் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகள், விறுவிறுப்பாக இருப்பதால், மக்கள் தொடர்ந்து, ஆரவாரமாய், கைதட்டி இரசிக்கின்றனர்.

அவ்வேளையில், திடீரென, திரைக்குப் பின்புறமிருந்து மேடைக்கு ஓடிவரும் கோமாளி, "மக்களே, அவசரமான ஓர் அறிவிப்பு... மேடையின் பின்புறத்தில் தீப்பிடித்துள்ளது. எனவே, தயவுசெய்து, விரைவாக இங்கிருந்து வெளியேறுங்கள்" என்று கத்துகிறார்.

ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர் ஒருவரிடம், நான்கு பேர் சென்று, ஐயா, இந்த உலகில் நடக்கும் காரியங்களில், நியாயம் எது? அநியாயம் எது? என்பது தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறோம், தயவுசெய்து எங்கள் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள் என்று பணிவோடு கேட்டனர். சரி, என்னோடு இந்த புஷ்பக விமானத்தில் ஏறுங்கள், உலகில், சாதாரணமாக நடக்கும் காட்சி ஒன்றை உங்களுக்குக் காட்டுகிறேன். அது நியாயமா? அநியாயமா? என்று நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பதில் தவறாக இருந்தால், அந்த இடத்திலேயே இந்த விமானம் உங்களை இறக்கி விட்டுவிடும்
ஒருசமயம், ஒரு சிட்டுக்குருவிக்கு வினோதமான செயல் ஒன்றைச் செய்ய ஆசை. அதனால், தனது முதுகில் ஒரு பையைக் கட்டிக்கொண்டு சிட்டெனப் புறப்பட்டது. அது சென்ற வழியில், டும்டும் என்ற துப்பாக்கிச் சப்தம் கேட்டது. அதைப் பார்த்த குருவி, மனிதர்களிடையே சண்டை நடக்கிறது, அதனால், அவர்களின் கோப உணர்வைச் சேகரில்லாமே என்று நினைத்து, அவர்களிடம் வெளிப்பட்ட அந்த உணர்வைச் சேகரித்து பையில் போட்டுக்கொண்டு பறந்தது. அடுத்து ஓரிடத்தில், ஒருவர் எதையோ பறிகொடுத்ததுபோல் இருப்பதைப் பார்த்து, ஏமாற்றத்தையும் சேகரித்து பையில் போட்டுக்கொண்டு, உற்சாகமாகப் பறந்தது.
ஓர் ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தபோது, பயங்கர மின்னலுடன் இடி இடித்தது. பயந்துபோன அவர்கள், பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர். வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. பெருமழையும் பெய்தது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவர், ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான், கடவுள், இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார்.
குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அனைத்து நிலைகளிலும் நாம் எவ்வளவு நலமாக உள்ளோம் என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல், அங்கு வாழும் குழந்தைகளே, அவர்களே நமது நம்பிக்கை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் தலத்திருஅவைக்கு அனுப்பிய ஒரு மடலில் கூறியுள்ளார்.

1717ம் ஆண்டு, பிரேசில் நாட்டில் அபரெசிதா (Aparecida) அன்னை மரியாவின் அற்புத உருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 300ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களையொட்டி, அந்நாட்டில் சிறப்பிக்கப்பட்ட குழந்தைகள் வாரத்திற்கென திருத்தந்தை அனுப்பிய வாழ்த்து மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அவர் அந்த இடத்தை சுற்றி பல தடவை தேடிப்பார்த்தும், அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை. பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, "என் கைக்கடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார். சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.......

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது. இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவையும் ஆவி யையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது. எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது. உள்ளத்தின் சிந்தனைகளை யும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.